• 8 years ago
சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் 'வாழ்ந்ததை' ஏன் மெனக்கெட்டு மறைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக அனுப்பியுள்ளார். 1980-ம் ஆண்டு சோபன் பாபு- ஜெயலலிதாவை இணைத்து மும்பையில் இருந்து வெளியான ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏடு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை குமுதம் வார இதழ் 1980-ல் மொழிபெயர்த்து வெளியிட்டது. இதை பின்னாளில் திமுகவின் முரசொலி நாளேடும் பதிவு செய்திருந்தது.

ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்: அன்புடையீர், உங்கள் நிருபர் நன்றாக குழம்பி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆர். ஜெயராம் என்பது காலமாகிவிட்ட என் தந்தையின் பெயர். சாதாரணமாக கடிதப் போக்குவரத்து அத்தனையிலும் நான் (மிஸ்) ஜெயலலிதா ஜெயராம் என்றே கையெழுத்திடுவது வழக்கம். நான் ஜெயராமின் மகள் என்பதை உங்கள் நிருபர் நான் படித பிரஸ்ன்டேஷன் கான்வென்ட், சர்ச் பார்க் பள்ளி ரிஜிஸ்தரை பார்த்து தெளிவடையலாம்.

திரு. ஷோபன் பாபுவுடன் நான் கடந்த 7 ஆண்டுகளாக கோயிஸ் ஸ்டெடி. அவர் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்பதைப் பெருமையுடன் உணர்வதால் இந்த நட்பு என் ஆயுள் உள்ளவரை நீடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

Here is the letter from Jayalalithaa to Mumbai Magazine on her relationship with Sobhan babu.

Category

🗞
News

Recommended