Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/8/2017
நிதாரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அருகே நொய்டாவில் 2005-06ல் தொடர் கொலைகள் அரங்கேறி, அந்த தகவல் வெளியானதும், அது நாட்டையே உலுக்கியது. 11 பெண்கள் உட்பட 19 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டனர். பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தனர் கொலையாளிகள்.
இதுதொடர்பான, போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையாளிகள், தொழிலதிபர் மொனிந்தர் சிங் மற்றும் சுரிந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு போலீஸ் விசாரணை திருப்திகரமாக இல்லாததால், சிபிஐயிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது

காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 16 வழக்குகளில் ஒன்றான பலாத்கார முயற்சி, கொலை, சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் இவ்விருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 8 வழக்குகளில் இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் அரிதினும் அரிதானவை என்ற வாதத்தின்கீழ் வருபவை என்பதால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

Category

🗞
News

Recommended