Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/30/2018
சென்னை அருகே ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த, கொருக்குப்பேட்டை பகுதியில், புதுநகர் ரயில் நிலையம் அருகே இன்று காலை காதல் ஜோடி ஒன்று ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் ஜோடி சடலத்தை பார்த்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இறந்தவர்களின் அடையாளங்களை வைத்து பெயர் மற்றும் ஊரை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தற்கொலை செய்தவர்கள் ஆகாஷ் மற்றும் ரம்யா என தெரியவந்தது. இருவருமே, அத்திப்பட்டு புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்களாகும். இருவரும் காதலர்கள் என விசாரணையில் தெரியவந்தது. காதலர்களான இவர்கள் ஏன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. அதுகுறித்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Category

🗞
News

Recommended