• 7 years ago
நடிகை ஸ்ரீதேவியில் மரணம் குறித்த தடயவியல் ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. இதனால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

ஸ்ரீதேவி துபாயில் நேற்று முன்தினம் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



முதலில் தடயவியல் அறிக்கை மட்டும் வந்து இருந்தது. அதன் காரணமாகவே நிறைய சந்தேகங்கள் எழ தொடங்கின. இப்போது உடற்கூறு அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.



அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்தார் என்றுள்ளது. ஆனால் மாரடைப்பு குறித்து இதுவரை எதுவும் வெளியாகவில்லை. எனவே தண்ணீரில் மூழ்கியதால் மாரடைப்பு ஏற்பட்டதா என்ற சந்தேகம் உருவாகி இருக்கிறது.



அதே சமயத்தில் அவர் உடல்நிலை தடுமாறி தண்ணீர் தொட்டியில் விழுந்து இருக்கிறார். இதற்கான ஆதாரம் இருக்கிறது. எனவே அவர் உடல் தடுமாறி தண்ணீரில் விழுந்து அதன்பின் இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.



மேலும் அவர் போதை காரணமாக தண்ணீரில் தடுக்கி விழுந்து அந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் இன்னும் முழுமையான அறிக்கை வெளியாகவில்லை. இதனால் நிறைய கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

Category

🗞
News

Recommended