மூடுபனியால் மூடிய காலை நேரம் சென்னையை நீலகிரியாக மாற்றி விட்டது. கொட்டிய வெம்பாவினால் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்கள் சென்றன. சென்னை: சென்னையில் வடகிழக்குப் பருவமழைக்காலம் முடிந்து விட்டதன் அறிகுறியாக பனிக்காலம் தொடங்கிவிட்டது. வெம்பா கொட்டினால் இனி மழை பெய்யாதோ என்று பேசத் தொடங்கிவிட்டனர் சென்னைவாசிகள். அதிகாலையில் ஜில்லென்ற கிளைமேட் சென்னையை சூழ்ந்துகொண்டது. சூரியன் ஒளிந்து கொள்ள மூடுபனி கண்களுக்கு புகை மூட்டமாக தென்பட்டது. போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கியதால் பலரும் பலரும் கண் விழிக்க காலதாமதமானது. காலை 9 மணிவரை புறநகரை சூழ்ந்த பனிமூட்டம் வாகன ஓட்டிகளை கடும் சிரத்திற்கு ஆளாக்கியது. கடந்த சில வாரங்கள் வரை சென்னையை மழை புரட்டி போட்ட நிலையில் இப்போது மூடு பனி சென்னையை மூடி மக்களின் மூடினை மாற்றி வருகிறது.
Category
🗞
News