Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/9/2018
மேற்கு மாம்பலத்தில் பட்டப்பகலில் கேபிள் டி.வி. அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாம்பலம் நாயக்கர்மார் தெருவில் வசித்து வந்தவர் கந்தன் (47). அந்த பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். இதனால் அவர் சுற்றுவட்டாரத்தில் பலருக்கும் பழக்கமானார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 7.30 மணிக்கு கந்தன் தனது மகள் கீர்த்தனா என்பவரை பைக்கில் கல்லூரிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

'லேக் வியூ' சாலை பகுதியில் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் இருவர் ஹெல்மெட் அணிந்தபடி வேகமாக வந்தனர். அவர்கள் வேண்டுமென்றே கந்தனின் பைக்கை வழிமறித்தபடி வந்து அதன் மீது மோதினர். இதனால் கந்தன் தடுமாறி தனது மகளுடன் கீழே விழுந்தார். அவர் எழுந்திருப்பதற்குள் 2 மர்ம நபர்களும் அவரை கழுத்திலும், முகத்திலும், தலையிலும் சரமாரியாக வெட்டினர்.

இதைப்பார்த்து பீதியடைந்த கீர்த்தனா, தனது தந்தையை வெட்டியவர்களை தடுக்க தீரத்தோடு முயன்றாார். அப்போது அவரது கையையும் கொலையாளிகள் இரக்கமின்றி வெட்டினர். இதன்பிறகு அந்த கொலையாளிகள் அங்கிருந்து பைக்கில் தப்பியோடினர். அதிகப்படியான வெட்டு காயங்களால் துடித்த கந்தன், அதே பகுதியில் உயிரிழந்தார்.

Category

🗞
News

Recommended