• 7 years ago
பெரு நாட்டில் இறப்பு சான்றிதழ் இல்லாததால் இறந்து போன குழந்தையின் உடல் பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருக்கிறது. சரியாக ஒருவாரமாக அந்த குழந்தையின் உடல் வீட்டில் பயன்படுத்தப்படும் பிரிட்ஜில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. குழந்தையின் தாயே இந்த செயலை செய்து இருக்கிறார். மருத்துவமனை நிர்வாகத்தின் மோசமான செயல்பாடே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த குழந்தையின் உடலை வெளியே அனுப்ப வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் விடாப்பிடியாக இருந்ததாக கூறப்படுகிறது.

பெரு நாட்டின் லீமா என்ற பகுதியை சேர்ந்த 'மோனிகா பலோமினா' என்ற பெண்ணுக்கு சென்ற வாரம் ஆண் குழந்தை ஒன்று பிறந்து இருக்கிறது. ஆனால் அந்த குழந்தை பிறக்கும் போதே சரியான வளர்ச்சி இல்லாமல் பிறந்துள்ளது. இதன்காரணமாக அந்த குழந்தையை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். ஆனால் பிறந்த 24 மணிநேரத்தில் அந்த குழந்தை மரணம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் படி கூறியிருக்கிறது. குழந்தை இறந்து 2 மணிநேரம் கூட அந்த பெண் மருத்துவமனையில் வைக்கப்படவில்லை. மருத்துவமனையில் இடம் இல்லை என்று பொய் காரணம் கூறப்பட்டு உள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு இறப்பு சான்றிதழும் கொடுக்கப்படவில்லை.

Category

🗞
News

Recommended