• 7 years ago
போலீஸ் அறைத்ததில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜபிரபாகரன். இவர் கல்லூரி ஒன்றில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தன் நண்பர்களோடு பிரிண்ட் அவுட் எடுப்பதற்க்காக காளையார்கோவில் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராஜபிரபாகரன் தன் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பும் போது தேவநேசன் என்ற கான்ஸ்டபிள் ராஜ பிரபாகரனை கூப்பிட்டு சரிவர விசாரிக்காமல் அறைந்துள்ளார். கான்ஸ்டபிள் அறைந்த்தில் ராஜபிரபாகரனுக்கு காது வலி ஏற்பட வலியால் துடித்துள்ளார். உடனே அவரது நண்பர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவதன்று இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜ பிரபாகரனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், அதி வேகம் தலைகவசம் அணியாமல் இருந்த்து உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராஜபிரபாகரன் அவரது நண்பர்கள் தாக்கிய தேவநேசன் என்ற காவலர் மீது காவல்துறை உயரதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரி தேவநேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். லைசென்ஸ் தலைகவசம் இல்லாமல் ஓட்டும் வாகன ஓட்டிகளை சிவகங்கை மாவட்ட போலீசார் தாக்கும் சம்பவம் அப்பகுதியில் தொடர்கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Category

🗞
News

Recommended