• 7 years ago
காதலன் திருமணம் செய்த மறுத்ததால் சம்மதிக்கும் வரை செருப்பால் அடித்து உதைத்த காதலியின் அடி தாங்கமுடியாத காதலன் வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரமாநிலம் தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா. அதேபகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பரும் திவ்யாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையில் சந்திரசேகரனுக்கு அவரது பெற்றோர்களும் உறவினர்களும் சேர்ந்து வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனை அறிந்த திவ்யா தனது உறவினர்களுடன் சந்திசேகரின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். அதற்கு சந்திசேகர் மறுக்கவே தனது காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து சந்திரசேகர் திருமணம் செய்ய சம்மதிக்கும் வரை அடித்து துவைத்துள்ளார். ஒருகட்டத்தில் திவ்யாவின் செருப்படியை அடியை பொருக்க முடியாமல் சந்திரசேகர் திவ்யாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள கோவிலில் பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இச்சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Category

🗞
News

Recommended