• 7 years ago
நாம் உயிரோட இருக்க உதவும் உறுப்புகளில் இதயமும் ஒன்று. இந்த இதயம் தான் நமது உள்ளுறுப்புகள் அனைத்திற்கும் இரத்தத்தை பம்ப் செய்கிறது. நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் தான் நம் இதயத்தை காக்க பயன்படுகிறது. இதய நோய்கள் மிகவும் கொடியது. இந்த உயிரைக் கொல்லும் இந்த இதய நோய்கள் நமது இரத்த குழாய்களில் படியும் தேவையற்ற கொழுப்புகளால் ஏற்படுகிறது. இதனால் நமது இரத்த குழாயான தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இரத்தம் சீராக பாய முடியாமல் இதயம் செயலிழந்து போய்விடுகிறது.

இந்த தமனிகள் தான் ஆக்ஸிஜன் நிறைந்த சுத்தமான இரத்தத்தை இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்கிறது. கொழுப்புகள், கசடுகள் போன்றவை தமனிகளில் அடைப்பை உண்டாக்கி இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துகிறது. இதனால் ஹார்ட் அட்டாக், பக்க வாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த தமனிகளை சுத்தமாகவும் அடைப்பு இல்லாமல் வைத்து கொள்ள நாம் சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆரோக்கியமான உணவுகள் உங்கள் தமனிகளில் உள்ள அடைப்பை நீக்கி அவற்றை சுத்தமாக்கி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. அப்படிப்பட்ட உணவுகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Category

🗞
News

Recommended