• 6 years ago
தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளனர். அதில், தலைநகர் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நெல்லையும் மூன்றாவது இடத்தில் மதுரையும் கடைசி வரிசையில் நீலகிரியும் இருக்கிறது' என மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்போது டி.ஜி.பியாக இருந்த ராமானுஜம் தாக்கல் செய்த தகவல் இது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தாக்கல் செய்த இந்தத் தகவலுக்கும் தற்போதுள்ள நிலவரத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. அவர் அளித்த பட்டியலில், ' மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டுவருகிறது. சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் உள்ளனர். நெல்லை நகர்ப்புறத்தில் 334 ரவுடிகளும் நெல்லை புறநகர் பகுதிகளில் 1,214 ரவுடிகளும் மதுரை மாவட்டத்தில் 888 ரவுடிகளும் மதுரை புறநகரில் 484 ரவுடிகளும் கன்னியாகுமரியில் 748 ரவுடிகளும் இருக்கின்றனர்' என விரிவான பட்டியலையும் கொடுத்திருந்தார். 2011-ம் ஆண்டு பிப்வரி மாதம் 10-ம் தேதி. மயிலாப்பூர், சிலேட்டர்புரம் பகுதி. நள்ளிரவில் 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் இரண்டு பேரைக் குறிவைத்துக் களமிறங்கியது. வீட்டின் ஓடுகளைப் பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்து, பில்லா சுரேஷையும் விஜயகுமாரையும் சராமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு சாவகாசமாக அந்த இடத்தைவிட்டு அகன்றது. இதில், பில்லா சுரேஷ் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இந்தக் கொலைக்கான மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர் என போலீஸாரால் சொல்லப்பட்டவர் நிர்மல். அவரது சொந்த அக்கா மகன்தான் விஜயகுமார். நிர்மல் கும்பலுக்கும் பெரிய மகேஷ் கும்பலுக்கும் இருந்த கட்டப் பஞ்சாயத்து தகராறுதான், நீயா நானா...பிரச்னையாக வளர்ந்தது என்றாலும், ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் எதற்கு என்ற கேள்விதான் மகேஷை மரணப் பாதைக்குக் கொண்டு சென்றது. தேனாம்பேட்டை சிடி மணியின் அரசியல் பாணிக்கும் சிவக்குமாரின் கிரிமினல் பாதைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆடி கார், அரசியல்வாதிகளின் நட்பு, காவல்துறையின் தொடர்புகள் என இருவரையுமே சம அந்தஸ்தில் வைத்துப் பார்க்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். போதைக் கடத்தல் மன்னன் பினுவோடு சிவக்குமாருக்கும் பழக்கம் உண்டு. பிறந்தநாள் பார்ட்டியில் இவரும் கலந்து கொள்வதாகத்தான் இருந்தது. கடைசிநேரத்தில் வந்த எச்சரிக்கை மணி, சிவக்குமாரையும் மணியையும் தப்பவைத்துவிட்டது.

Category

🗞
News

Recommended