• 7 years ago
இந்து மதத்தில் ஸ்ரீராம பக்தரான ஆஞ்சநேயர் மிகவும் சிறப்பாக போற்றக்கூடியவர். அனுமன் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயரின் வாழ்க்கையை அனைவரும் படித்து பயன் அடைய வேண்டும்.

இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா?

ஸ்ரீராமரின் பக்தரான அனுமன் பக்தியிலும், வீரத்திலும் சிறந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.பிரம்ம கடவுளின் தேவலோகத்து அழகியான அஞ்சனாவிற்கு துறவி ஒருவர் சாபம் அளித்தார். அதாவது அவள் எப்பொழுது ஒருவரை காதலுடன் பார்கின்றாளோ அந்த நேரத்தில் அவள் முகம் குரங்கு போல் ஆகும் என்பது தான் அந்த சாபம். அவள் சாபம் நீங்க பிரம்மன் அவரை பூலோகத்தில் பிறக்க வைத்தார். அங்கே கேசரி மன்னன் மீது காதல் கொண்டு திருமணம் புரிந்தார் அஞ்சனா. சிவன் மீது அதீத பக்தி கொண்ட அஞ்சனாவிற்கு ஆசி வழங்கவும் சாபம் நீங்கவும் சிவனே குழந்தையாக அஞ்சனாவிற்கு பிறக்க சித்தம் கொண்டார்.

சில நாட்களுக்கு பிறகு தசரத மன்னன் யாகம் நடத்தி அதன் மூலம் பெற்ற பாயாசத்தை தன் மனைவிகள் அனைவருக்கும் அளித்தார். அதில் கெளசல்யாவிற்கு அளித்த பாயாசத்தின் ஒரு பகுதியை அங்கு பறந்து வந்த பட்டம் அள்ளி சென்று தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனாவிடம் அளித்தது. அதை சிவனின் பிரசாதம் என்று எண்ணி அவரும் அருந்தினார். இதை வாயு பகவான் நிகழ்த்தி உள்ளார். அதில் பிறந்தவர் தான் ஆஞ்சநேயர் என்ற அனுமன். ஆகையால் அனுமான் வாயு புத்திரன் என்று போற்றப்படுகின்றார்.

ராமர் மீது அதீத பற்று கொண்டுள்ளவர் அனுமன். ஒரு முறை சீத்தா தேவி தன் நெற்றியில் செந்தூர் அணிந்திருந்தார். அதன் காரணத்தை அனுமன் கேட்க, தன் கணவனான ராமரின் மீது தான் கொண்டுள்ள பக்தியையும், அன்பையும் வெளிக்காட்டவும் அதோடு அவருடைய நலத்திற்காகவும் தான் செந்தூரம் பூசி கொள்வதை சீதா தேவி கூறினார். உடனே அனுமன் தன் உடல் முழுவதும் செந்தூரம் பூசி ராமன் மீது தான் கொண்டுள்ள பக்தியையும், அன்பையும் காட்டினார். மெய் சிலிர்த்த ராமன் எதிர்காலத்தில் அனுமனை தொழுபவர் யாவரும் சிந்தூரம் அணிந்து கொள்வார்கள் என்ற வரத்தை அனுமனுக்கு அளித்தார்.


Here are some interesting facts about lord hanuman. Read on to know more...

Category

🗞
News

Recommended