• 7 years ago
சில விஷயங்களை நாம் பிறந்ததில் இருந்து உண்மை என்று நம்பி வந்திருப்போம். ஏன் இங்கே உங்களை விழிபிதுங்கி போக செய்யும் சில உண்மைகள் நமது வகுப்பறையில் பயிற்றுவிக்கப்பட்டவையும் கூட... நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்த பிறகே அவர் புவியீர்ப்பு கண்டறிந்தார் என்பதில் துவங்கி, டாம் அன்ட் ஜெர்ரியில், ஜெர்ரி சீஸ் விரும்பி உண்ணும் என்பது வரை நாம் நம்பி ஏமார்ந்த விஷயங்கள் பலவன இருக்கின்றன. இதோ! இவை எல்லாம் நம்மை காலம், காலமாக முட்டாளாக்கி வந்த பொய்கள்.. பிஞ்சு கேரட்டுகள்! நாம் சில காய்கறிகளை பிஞ்சாக இருந்தால் தான் வாங்கி சுவைக்க, சமைக்க விரும்புவோம். அதில் ஒன்று தான் கேரட். கேரட் பிஞ்சாக இருந்தால் தான் சுவையாகவும், சமைக்க எதுவாகவும் இருக்கும். இதை அறிந்துக் கொண்ட வர்த்தக புள்ளிகள், பெரிய சைஸ் கேரட்டாக இருந்தாலும், அதை ஒரு மெஷினில் போட்டு பிஞ்சு கேரட் போல கட் செய்து விற்கிறார்கள். பார்த்தீர்களா, இவர்களுடைய ஜகஜால கில்லாடித்தனத்தை. கொசுறு: 1986ல் கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு கேரட் வியாபாரி, பெரிய சைஸ் கேரட்டுகளை காட்டிலும், பிஞ்சு கேரட்டுகளுக்கு தான் மார்கெட்டில் மவுசு இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டு, தனது நிலத்தில் விளையும் கேரட்டுகளை ஒரே மாதிரியாக சிறியதாக வெட்டி எடுத்து சென்று விற்று வந்தார் என பரவலாக ஒரு கதை அறியப்படுகிறது.


Facts That Prove Your Life Is a Lie

Category

🗞
News

Recommended