இணையப் புகழ் கல்பனா அக்காவைப் போன்றே, தனது கலக்கல் டப்ஸ்மாஷ்களால் வைரலாகி வருகிறார் சித்ரா கோஜல் என்ற பெண். சித்ரா கோஜலை அவரது ரசிகர்கள் அன்புடன் ஆண்ட்டி என்றே அழைக்கின்றனர். அவர் எந்த ஊர், வயது என்ன, குடும்பப் பின்னணி என்ன என எதுவும் தெரியவில்லை. ஆனால், பாடலாகட்டும், டயலாக் ஆகட்டும் ஒவ்வொரு டப்ஸ்மாஷூக்கும் கலக்கல் ரியாக்ஷன் கொடுத்து அப்ளாஷ் அள்ளுகிறார். தன் கம்பீரமான சொந்தக் குரலில் பாடி, தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் கல்பனா அக்காவைப் போலவே, சித்ரா ஆண்ட்டியும் கடந்த ஒருவாரமாக சமூகவலைதளங்களில் வைரல்.
Category
🗞
News