• 7 years ago
கடந்த ஓராண்டாகவே மீடியா மற்றும் சினிமா வட்டாரங்களில் தடதடக்கும் செய்தி, கலர்ஸ் சேனல் தமிழில் வரப்போகிறதாமே!? எனத்தொடங்கி, ஆர்வத்தோடு ஆளாளுக்கு அவர்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத தகவல்களையும் கலந்து கட்டி புது கலர்ஸ்' தீட்டிக்கொண்டிருந்தார்கள்! 'ஏற்கனவே இருக்கிற சேனலைப் பார்க்கவே நேரமில்லை இதில் புதுசா ஒண்ணு வருதாக்கும்!' என்கிற பாமர மக்களின் பரிதவிப்பு ஒருபக்கம். எல்லாருடைய யூகங்களுக்கும் விடையாக... இதோ, வரும் திங்கள் முதல் உங்கள் பார்வைக்கு வரப்போகிறது! வேறு மொழிகளில் அதகளப்படுதிக் கொண்டிருக்கும் சேனல் என்பதால் எதிர்பார்ப்பும் எகிறிக்கிடக்கிறது! இப்படியான சூழலில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. ஏற்கனவே ஏகப்பட்ட சேனல்கள் இருக்கும்போது இன்னொரு சேனல் வந்தால் யார் பார்ப்பார்கள் என்பதுதானே முதல் கேள்வியாக இருக்கும்? அதற்கு விடை சொல்வதுபோலவே இருந்தது சேனல் தரப்பில் பேசியவர்களின் கருத்து. பொதுவாக சினிமா பிரஸ் மீட்டில் பேசுகிற ஒவ்வொரு இயக்குநரும், "இதற்கு முன் இப்படியொரு படத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்" என்றுதான் காலங்காலமாக ஆரம்பிப்பார்கள். ஒளிபரப்பட்ட புரமோக்களில் மிர்ச்சி சிவா நிகழ்ச்சி தவித்து, பாக்கியெல்லாம் வழக்கமான நிகழ்ச்சி போலவே இருக்கின்றன! நிகழ்ச்சி நிரலை நீட்டி முழங்கியதுகூட காரணமாக இருக்கக் கூடும்! கலர்ஸ் தரப்பில் மிக கவனமாகச் சொல்லப்பட்ட ஒரு விசயம் - சீரியல்கள், டாக் ஷோ, இன்னபிற எதுவும் பொறுப்புணர்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் என்பது! ஒரு தொடரின் பாடல்காட்சி, தென் மாவட்டங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. பாடல் முடியும் தருணத்தில் திருவிழாவில் ஆளாளுக்கு வண்ணப்பொடிகளை வாரி இறைக்கிறார்கள்... டகலர்ஸ்' என்று டைட்டில் வருகிறது!? சவுக்கார் பேட்டைதாண்டி தமிழ் நாட்டு திருவிழாக்களில் வண்ணப்பொடி வாரியிறைப்பது புதுசு! சமீபத்திய பிக்பாஸ் தொடங்கி நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்சிகளுக்கு, ஆட்களுக்கு தகுந்த மாதிரி அள்ளிக் கொடுத்தால் மட்டுமே ஒப்புகொள்வார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். ஆர்யா கலந்து கொள்ளும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்றொரு நிகழ்ச்சி. ஆர்யாவின் ப்ளேபாய் பிம்பம் வருசத்திற்கு ஒருமுறை படம் பார்க்கவருகிற ரசிகனுக்கும் தெரியும். ஆனால், "இந்த நிகழ்ச்சிக்கு நீங்க பணம் வாங்கிகிட்டு பண்றீங்கன்னு பேசிக்கிறாங்களே?" என்று தொகுப்பாளினியாக வரும் நடிகை சங்கீதா கேட்கிறார். அதை ஆர்யா மறுக்கிறார்.

Is Colors channel clicks in Tamil TV world? Here is an analysis.

Category

🗞
News

Recommended