• 8 years ago
நடிகர் சோபன் பாபுவை தம்மால் திருமணம் செய்யாமல் போனது ஏன் என்பது தொடர்பாக குமுதம் வார இதழுக்கு ஜெயலலிதா அளித்திருந்த பேட்டியில் விவரித்திருக்கிறார். 1980-ம் ஆண்டு குமுதம் இதழுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: கேள்வி: ஏற்கனவே திருமணமான ஒருவருடன் வாழ்க்கை நடத்துவது தவறில்லை என்பது உங்கள் அபிப்ராயமா? பதில்: ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்தபின்தான் இந்தப் பொதுவான கேள்விக்கு பதில் அளிக்க முடியும். ஆனால் எந்த கன்னிப் பெண்ணும் வேண்டும் என்று திட்டமிட்டு ஏற்கனவே திருமணமான ஒருவரை காதலிப்பது இல்லை. எந்தப் பெண்ணுமே தனக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். அவர் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள். நானும் அப்படித்தான் முதலில் கனவுகள் கண்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஷோபன் பாபுவைச் சந்தித்தவுடன் என் மனம் அவர் மீதே பற்றுக் கொண்டுவிட்டது. திட்டமிட்டுச் செய்த காரியமல்ல இது. அவரை முதலில் சந்தித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது.

அது அவருடைய தவறும் அல்ல. என்னுடைய தவறும் அல்ல. அவர் மனைவியை விவகாரத்து செய்து என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? எத்தனையோ பேர் அப்படிச் செய்யவில்லையா? என கேட்கலாம்.


Here is the Jayalalithaa's interview to Kumudam (1980) on marriage with Sobhan Babu.

Category

🗞
News

Recommended