• 8 years ago
கோமளவல்லி... இது தான் "அம்மா" என்று தமிழகத்தில் அனைவராலும் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் இயற்பெயர். எப்படி ஒரு தனி மனுஷி... இந்த கட்சியை தனியாளாக வழிநடத்தி சென்றார்? ஆணாதிக்கம் கொண்டுள்ள தமிழக அரசியலில் தனி ஒருத்தியாக எப்படி இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்? என முன்பை விட இப்போது தான் மக்கள் மத்தியில் மிகுந்த வியப்பு ஏற்படுகிறது. விளங்காத அறிக்கைகைகள், பிறழும் செயற்பாடுகள் என அவ்வளவு அக்கப்போர்கள். ஜெயலலிதா மிகுந்த செல்வாக்கும், செல்வமும், அதிகாரமும் கொண்டிருந்தார் என்பது மட்டுமே நமக்கு தெரிந்த விஷயங்கள். உலகறிந்த ஒரு அரசியல்வாதி, இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த நபர்.

அவர் நினைத்தால் எதை வேண்டாலும் அடையலாம் என்ற எண்ணம் தான் நம்மிடையே இருக்கிறது. ஆனால், தனது வாழ்வில் அவர் விரும்பிய மூன்றே மூன்று ஆசைகள் கூட அவரால் அடைய முடியவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

பணக்காரன், ஏழை, நடுத்தர வாழ்க்கை நடத்துபவன் என உலகில் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அனைவரிடமும் இருக்கும் முதல் ஆசை.... தாங்கள் விரும்பியதை படித்து, அந்த வேலை / தொழிலில் சிறந்த விளங்க வேண்டும் என்பது தான். இந்த ஆசை ஜெயலலிதா அவர்களுக்கும் இருந்தது. ஆனால், கிடைத்ததா என்பது தான் பெரிய கேள்விக்குறி.

பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருந்தார் செயலலிதா. பத்தாம் வகுப்பு மாநில அளவிலான மெட்ரிகுலேஷன் தெரிவில் முதல் இடம் பிடித்தமைக்காக அரசிடம் இருந்து கோல்ட் ஸ்டேட் விருது பெற்றிருக்கிறார் ஜெயலலிதா. இவருக்கு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இருந்து படிக்க சலுகை கிடைத்தது என்றும், அதை இவர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


Three Unfulfilled Desires of Jayalalitha Jayaram! Three Unfulfilled Desires of Jayalalitha Jayaram!

Category

🗞
News

Recommended