• 7 years ago
டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் காதலர் தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸை வழிபட உள்ளனர். உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் அதிலும் குறிப்பாக அந்த கல்லூரி விடுதியில் தங்கியிருப்போர் ஆண்டுதோறும் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி வருகிறார்கள். காதலர் தினத்தை கொண்டாட விடுதி மாணவ, மாணவியர் தயாராகிவிட்டனர். விடுதி மாணவ, மாணவியர் சேர்ந்து வாக்களித்து காதல் தேவதையாக ஒரு நடிகையை தேர்வு செய்வார்கள். இந்த ஆண்டு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸை தேர்வு செய்துள்ளனர். பூஜையின்போது மாணவர்கள் பலூன்கள் மற்றும் நீர் நிரப்பப்பட்ட ஆணுறைகளை வெர்ஜின் மரத்தில் தொங்கிவிடுவார்கள். அவ்வாறு செய்தால் 6 மாதத்திற்குள் காதல் மலருமாம், ஓராண்டுக்குள் வெர்ஜினிட்டியை(கன்னித்தன்மை) இழப்பார்களாம்.

Category

🗞
News

Recommended