Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/20/2018
இமயம் முதல் இலங்கை வரையிலான நிலப்பரப்பு தமிழர்களின் தாயகமாக இருந்தது; மொழிதிரிபுகளால் இன்று தமிழகம் என்ற சிறு பகுதிக்குள் வாழ்கின்றனர். இதற்கான சாட்சியமாக இருப்பவை குஜராத்தின் கட்ச்-பூஜ் பகுதிகளும் இன்றளவும் மத்தியபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா மலைகளில் வாழும் திராவிடப் பழங்குடிகளும். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியா தமிழர்களின் நிலம் என்று பேசியுள்ளார். இது பலருடைய ஆர்வத்தையும் கிளறியுள்ளது. அவர் கூறுவது உண்மைதான். இந்தியா தமிழ் பேசிய நாகர்களின் தேசமாகவே அன்று இருந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியின் லக்பதக் கோட்டைதான் ஒருகாலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக திகழ்ந்தது. இங்கு ஓடிய சிந்து நதியின் தடங்கள் இன்றளவும் காண முடியும்.

1819-ம் ஆண்டு மிகப் பெரிய நிலநடுக்கத்தினால் சிந்து நதி இடம் எப்படி இடம் மாறியது என்பதை விவரிக்கும் வரைபடத்தை இன்றளவும் இந்த கோட்டையின் முகப்பில் இந்திய தொல்லியல்துறை வைத்துள்ளதை நாம் காண முடியும். பெருமணற்பரப்பாக கைவிடப்பட்ட இடமாக லக்பதக் கோட்டை பகுதி இப்போதும் இருக்கிறது. இது எப்படி நாகர்களின் தேசமாகிறது? ஆதி தமிழர்களுக்கும் குஜராத்தின் கட்ச் பகுதிக்கும் என்ன தொடர்பு?

The Nagars, ancient Tamil People who lived all over india.

Category

🗞
News

Recommended