• 7 years ago
சிம்பு உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
ஏஏஏ படத்திற்காக வெயிட் போட்டார் சிம்பு. அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் திணறினார். இது என்ன சிம்பு வயதானவர் போன்று ஆகிவிட்டாரே என்று ஆளாளுக்கு பேசினார்கள்.
இந்த வயதிலேயே அங்கிளாகிவிட்டாரே என்றனர்.
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்கிறார்.
சிம்பு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்துவிட்டு தனது தொப்பையை குறைத்துவிட்டதை காண்பிக்க சட்டையை தூக்கிக் காட்டியதை பார்த்துவிட்டு பலரும் கலாய்த்தனர். ஆர்ம்ஸுக்கு ஒர்க்அவுட் செய்துவிட்டு தொப்பை குறைந்துவிட்டதாமே என்று சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.
சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சிம்பு நிஜமாகவே ஒல்லியாக உள்ளார்.

Category

🗞
News

Recommended