Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/5/2017
ஜெயலலிதாவிற்கு மகள் இருப்பதாகச் சொல்வது உள்நோக்கம் கொண்டது. சொத்துக்காக பலர் புரளி பரப்புவதா என்று லதா கேட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அப்படி இருந்திருந்தால் ஜெயலலிதாவே தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பார் என்று நடிகை லதா கூறியுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது சொல்லாமல் இப்போது மகள் இருப்பதாகச் சொல்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய லதா, ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பதாகக் கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது சொல்லாமல் இப்போது மகள் இருப்பதாகச் சொல்வது உள்நோக்கம் கொண்டது.ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. யாரும் விமர்சிக்கவும் முடியாது

ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அப்படி இருந்திருந்தால் ஜெயலலிதாவே தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பார். எந்தத் தாயும் தனக்கு குழந்தை இல்லை என்று மறுக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார் லதா.

Veteran actress Latha has slammed Bangalore based Amrutha for saying she is Jayalalitha's daughter.

Category

🗞
News

Recommended