• 8 years ago
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் பங்களாவின் கிரகப்பிரவேச பத்திரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதுமே போயஸ்கார்டன் என்றாலே நினைவுக்கு வருபவர் ஜெயலலிதாதான். கடந்த 44 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார் ஜெயலலிதாதான். ஜெயலலிதா வீட்டிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் சென்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த பிரதமர் மோடி வேதாநிலையம் சென்று விருந்து சாப்பிட்டார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நடந்துள்ளது. தனது தாயாரின் நினைவாகவே வேதாநிலையம் என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா.

இந்த வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சி அழைப்பிதல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த ரசனையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைவினைத் திறன்மிக்க இரு கதவுகள் திறந்தவுடன் அழைப்பு வாசகங்கள் அமைந்திருக்குமாறு உள்ள இந்த அழைப்பிதழின் முகப்பில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பிடித்த தெய்வம் விநாயகர்.

Jayalalithaa's house 'Veda Nilayam'house grahapravesam ivitation goes viral on social media. Jaya’s house Veda Nilayam named after her mother in Poes garden.

Category

🗞
News

Recommended