Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/11/2018
தன்னை கூத்தாடின்னு கேலி செய்தவரை பார்த்து பன்னி மூஞ்சி என்று விளாசியுள்ளார் நடிகை குஷ்பு.
நடிகையும், செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பற்றி ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதை பார்த்த ஒருவர் கூத்தாடி எல்லாம் பியூஷ் கோயல் பற்றி பேசுகிறார் என்று நக்கலாக கமெண்ட் போட்டார்.
தன்னை கூத்தாடி என்று கூறியவரை பார்த்து, டேய் லூசு...கூத்தாடின்னா யாருன்னு உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு வாய்யா...பன்னி மூஞ்சி, ஏன்டா அப்றம் என்னை ஃபாலோ பன்ற?? என்று குஷ்பு ட்விட்டர் மூலம் கேட்டார்.
குஷ்பு திட்டிப் போட்ட ட்வீட்டை பார்த்த அந்த நபர், கூத்தாடின்னா கெட்ட வார்த்தை இல்லையே அது ஒரு கலை சொல்.. அரசியல், கொள்கைகளில் உங்களின் அறியாமையையும், மக்களை திசை திருப்பி பிரதமராக விரும்பும் கார்ட்டூன் கேரக்டரை காப்பாற்ற நினைக்கும் உங்களின் எண்ணத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டவும் உங்களை ட்விட்டரில் பின்தொடர்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
அப்போ உங்க வீட்டுல இருக்கிற பொம்பளைங்கள அப்படி கூப்பிட்டா தப்பு இல்லன்னு சொல்லுறீங்க..என்ன ஒரு மரியாதை உங்க வீட்டுக்கு..கலக்கிட்டீங்க போங்க என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.
அவருக்கு ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் பதில் போடாதீர்கள் மேடம் என்று சிலர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

Actress cum congress spokesperson Khushbu Sundar has blasted a tweeple who made fun of her profession.


Category

🗞
News

Recommended