• 7 years ago
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றுளளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார். 108 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற உலக அழகி போட்டி தெற்கு சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. இதில் தனி ஆளாக கெத்து காட்டி இவர் பட்டம் வேண்டு இருக்கிறார். இந்த நிலையில் இவர் மிகவும் திறமையான நபர் என்ற உண்மைகள் தற்போது வெளியாகி இருக்கிறது. படிப்பு, அழகு, சினிமா, விளையாட்டு என பல துறைகளில் ராணியாக திகழ்கிறார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் பள்ளியில் இருந்தே மிகவும் திறமையான நபராக திகழ்ந்து வந்துள்ளார். மிகவும் நன்றாக படிக்கும் இவர் தற்போது மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இவர் குடும்பம் மொத்தமே மருத்துவ குடும்பம் தான். இவர் தந்தை 'டிஆர்டிஓ' நிறுவனத்தில் வேலை பார்க்கும் டாக்டர் பட்டம் பெற்ற நபர் ஆவார். இவர் தாயும் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானி ஆவார்.

படிப்பில் எப்படி சுட்டியோ அதேபோல் இவர் நடத்திலும் சுட்டிதான். சிறு வயதில் இருந்து இவர் குச்சுப்புடி நடனம் பயின்று வருகிறார். இந்தியாவில் இருக்கும் சிறந்த குச்சுப்புடி நடன கலைஞர்களிடம் சென்று இதற்காக பயிற்சி எடுத்து இருக்கிறார். குச்சிப்புடி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காக நிறைய பரிசுகள் வேறு வாங்கி இருக்கிறார்.
மனுஷி சில்லர் விளையாட்டு துறையிலும் ஆர்வம் உடையவர் ஆவார். இவர் பாலத்தில் இருந்து கயிறு கட்டி குதிக்கும் 'பங்கி ஜம்பிங்' விளையாட்டில் மிகவும் ஆர்வம் உடையவர். அதேபோல் பாராசூட்டில் பறக்கும் 'பாரா கிளைடிங்' விளையாட்டிலும் திறமைசாலி. கடலுக்கு உள்ளே ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று சாகசம் செய்யும் 'ஸ்னுர் கெலிங்' விளையாட்டிலும் திறமையானவர்.


Miss world Manushi Chchillar is a most talented girl in miss world competition participants. She is pursuing his doctor and she is a good singer, actor and dancer.

Category

People

Recommended