• 7 years ago
இம்புட்டு திமிரு ஆகாது என்று நடிகை ஒருவரை பற்றி இயக்குனர்கள் முணுமுணுக்கிறார்களாம்.
நடிப்பதுடன் நல்ல குரல் வளமும் உள்ள அந்த நடிகைக்கு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசை. அவர் நடிக்கும் படங்கள் ஓடினாலும் அவர் விரும்பும் அந்தஸ்து மட்டும் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.
நான் நடிக்கும் படங்கள் ஹிட்டாகின்றன, விளம்பர நிகழ்ச்சிகளை நான் புறக்கணிப்பது இல்லை, படங்கள் பற்றி நல்லவிதமாக பேசுகிறேன் அப்படி இருந்தும் ஏன் எனக்கு முன்னணி நடிகை அந்தஸ்து கிடைக்கவில்லை என்று புலம்புகிறாராம் நடிகை. மார்க்கெட் நடிகையின் சர்ச்சை சித்தி செய்யும் செயலை பார்த்து கோலிவுட்டே சிரிக்கிறது. மார்க்கெட் நடிகையின் பாதுகாவலராக இருந்த அவரது சித்திக்கும் நடிகைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய பஞ்சாயத்து ஆனது. நடிகையை பிரிந்த சித்தி நடிகைக்கு போட்டியாக தனது மகளை உருவாக்கி காட்டுவேன் என்று சபதம் எடுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார். மகள் வளர்ந்த உடன் சில நாட்களுக்கு முன்னர் அவரது படங்களை அனுப்பி வாய்ப்பு வேட்டையை தொடங்கினார். அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் இப்போது மகளை கவர்ச்சி ஃபோட்டோஷூட் எடுத்து அந்த படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

An actress is unhappy as she is not able to reach top position in Kollywood. That controversy market actress's step mother sent glamour stills of her own daughter to get chances in South Cinema.

Category

🗞
News

Recommended