Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/14/2017

நடிகை ரகுல் ப்ரித் சிங் தனது வருங்கால கணவர் பற்றி மனம் திறந்துள்ளார். வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் ஹிட்டாகியுள்ளது. தமிழில் ஒரு ஹிட் கிடைக்காதா என்று ஏங்கிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இந்த படம் மகிழ்ச்சி அளித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் ரகுல் ப்ரீத்.
கெரியரின் உச்சத்தில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் திருமணம், கணவர் பற்றி மனம் திறந்துள்ளார். தனக்கு எப்படிப்பட்ட கணவர், எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ரகுல்.
நம் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். என் திருமணமும் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார் ரகுல்.
நான் தெலுங்கு பேசும் நபரை திருமணம் செய்யலாம். சினிமா துறையை சேர்ந்த யாரும் இதுவரை என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தது இல்லை என்று ரகுல் தெரிவித்துள்ளார்.
டோலிவுட்டில் கொடி கெட்டிப் பறக்கும் சமந்தா தெலுங்கு ஹீரோவான நாக சைதன்யாவை திருமணம் செய்தார். தற்போது ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் அதே ஆசை வந்துள்ளது.


Actress Rakul Preet Singh said that she may marry a Telugu guy. She added that she has not received any love proposals from people in film industry.

Category

🗞
News

Recommended