• 7 years ago
அந்த ஒரு மணிநேரத்தை தன்னால் மறக்கவே முடியாது என்கிறார் மதுரவீரன் பட நாயகி மீனாட்சி. முத்தையா இயக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம் மதுரவீரன். பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்து பின்னர் ரிலீஸ் தேதியை ஒத்திப் போட்டுள்ளனர். படம் குறித்து ஹீரோயின் மீனாட்சி கூறியாதவது, சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவள் நான். என்னை மதுரவீரன் படத்தின் ஹீரோயினாக்கிய இயக்குனர் முத்தையாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய இடத்துப் பிள்ளை என்ற பந்தாவே இல்லாதவர் சண்முக பாண்டியன். மிகவும் எளிமையானவர். வசனம் பேச எனக்கு உதவி செய்தார். அனைவரிடமும் சரிசமமாக பழகுவார். விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து என்னுடன் ஒரு மணிநேரம் பேசினார்கள். அந்த ஒரு மணிநேரத்தை என் வாழ்க்கையில் எப்பொழுதுமே மறக்க முடியாது என்கிறார் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த மீனாட்சி.

Madura Veeran heroine Meenatchi said in an interview that DMDK chief Vijayakanth and his wife Premalatha met her on the sets and spent one hour with her. She added that she can never ever forget that one hour.

Recommended