• 6 years ago
6 ஆண்டுகளுக்கு முன்பு தனது சினிமா வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை என்கிறார் நடிகை சுர்வீன் சாவ்லா.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருந்த சுர்வீன் சாவ்லா ஒரு நல்ல நாளில் தொலைக்காட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு பெரிய திரைக்கு வந்தார்.
இந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள அவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் சினிமா துறை பற்றி கூறியிருப்பதாவது, சினிமா துறையில் காட் ஃபாதர் இருந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மை இல்லை. மக்களிடம் இருக்கும் திறமையை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று பார்க்கக் கூடாது. இப்படி பளிச்சென்று நான் பேச காரணம் உள்ளது. பட வாய்ப்புகளை 2 அல்லது 5 பேருக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் கொடுக்காமல் பலருக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் வாய்ப்புகள் குறைவு. திறமைக்காக அல்ல யாரோ ஒருவரின் மகள் என்பதற்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர சிறுது காலம் தேவைப்பட்டது. ஆனால் திறமையால் ஜெயிக்க முடியும் என்று எனக்கு நானே நம்பிக்கை அளித்துக் கொண்டேன் என்கிறார் சுர்வீன் சாவ்லா.


Actress Surveen Chawla said that she was replaced by a star kid six years ago when she left televison for big screen.

#suvreenchawla #bollywood #nepotism

Category

🗞
News

Recommended