• 7 years ago
கடந்த ஆண்டு இறுதியில் பெண்ணிய படங்களாக ரிலீஸ் ஆகி நமக்கு இன்ப அதிர்ச்சி அளித்தன. இப்போது விவசாயம் சார்ந்த கதையம்சம் உடைய படங்களாக தயாராகி வருகின்றன. பொங்கலன்று வெளியான விளம்பரங்களே அதற்கு சாட்சி. தனுஷ் இயக்கும் நடிக்கும் படங்களுக்கு எல்லாமுமாக இருந்த சுப்ரமணிய சிவா 'பேக் டூ ஃபார்மாக' இயக்கும் படம் வெள்ளை யானை. சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கிறார். தஞ்சை மண்ணைச் சார்ந்தவர் சுப்ரமணிய சிவா. சமீபத்தில் கூட கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை தனுஷிடம் எடுத்துச் சென்று தனுஷ் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வைத்தவர். எனவே விவசாயிகளின் வலிகளை படத்தில் மையப்படுத்தியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயம் சார்ந்த கதையாக இருந்தாலும் காமெடியான கதையாக இருக்குமாம் வெள்ளை யானை. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா சாகல் நடிக்கும் படம். விவசாயம் சார்ந்த படம் என்பதை நேரடியாகவே சொல்லியிருக்கிறார்கள். சத்யராஜின் மகனாக நடிக்கிறார் கார்த்தி. தந்தையின் விவசாய நிலங்களையும் தாய்மண்ணின் விவசாயத்தையும் கார்த்தி காப்பாற்ற போராடுவது தான் கதை. அமீர் விவசாய சங்க தலைவராக நடிக்கும் படம். விவசாயம் சார்ந்த கதையாகவும் அரசியல் நையாண்டி நிறைந்ததாகவும் உருவாகி உள்ளதாம் அச்சமில்லை அச்சமில்லை படம். இந்த படம் முழுவதுமாக முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. காக்கா முட்டை மணிகண்டம் இந்த டைட்டிலை அறிவித்தபோதே மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் சில சூழ்நிலைகளால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினியே மணிகண்டனை அழைத்து இந்த படம் பற்றி பேசியதாகச் சொல்கிறார்கள். இவை தவிர கத்திரிக்கா வெண்டக்கா உட்பட சில சின்ன படங்கள் விவசாயம் சார்ந்த படங்களாக உருவாகி வருகின்றன. இந்த ஆண்டு விவசாய சினிமாவாக மாறப்போகிறது கோலிவுட்.

Here is the list of Movies based on Agriculture which lioning up in the year 2018

Category

🗞
News

Recommended