• 7 years ago
பெண்களை படுக்கைக்கு அழைப்பது சரி என்று கூறிய டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கானுக்கு ஆதரவாக பேசியுள்ளார் நடிகை ரிச்சா சட்டா.
பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லை அவர்களுக்கு வேலை கிடைக்கிறதே. பலாத்காரம் செய்து கைவிடப்படுவது போன்று அவர்களை கைவிடவில்லை என்று பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை ரிச்சா சட்டா அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
ஒன்னுமே இல்லாத விஷயத்தை மக்கள் ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று நினைக்கிறேன். பாலிவுட்டில் உள்ளவர்கள் ரொம்ப மோசமானவர்கள், பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று கூறுவதில் உண்மை இல்லை என்கிறார் ரிச்சா.
படுக்கைக்கு அழைப்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என்று சரோஜ் கான் கூற நினைத்துள்ளார். அதில் ஏன் பாலிவுட்டை மட்டும் தனியாக பிரித்து பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ரிச்சா.
ஃபக்ரி படத்தை விளம்பரப்படுத்தியபோது பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று ரிச்சா தெரிவித்திருந்தார். அப்போ அது எல்லாம் படத்தின் பப்ளிசிட்டிக்காகவா என்று கேட்டு நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.
ரிச்சா கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். ஷகீலாவாக நடிக்க அவர் மலையாளம் கற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சரோஜ் கானை அவர் ஆதரித்துள்ளது கூட சுய விளம்பரம் தேடத் தான் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

Bollywood actress Richa Chadda has come in support of award winning choreographer Saroj Khan who defended casting couch.

Category

🗞
News

Recommended