• 6 years ago
கடந்த ஆண்டு தமிழில் பரபரப்பான சுசி லீக்ஸ் போல, சமீப சில நாட்களாக தெலுங்குத் திரையுலகத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விஷயம் ஸ்ரீ லீக்ஸ்.
நடிகை ஶ்ரீ ரெட்டி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை அம்பலப்படுத்தப் போகிறேன் என விதவிதமான போஸ்களுடன் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தனக்கு திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனக் கூறி நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தெலுங்கு நடிகை ஶ்ரீ ரெட்டி, 'Sri leaks' என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அரைகுறையாக புகைப்படங்களை வெளியிட்டது தெலுங்கு திரையுலகை அதிர வைத்தது. பட வாய்ப்பு கேட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிடப்போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்திருந்தார்.
ஸ்ரீ லீக்சில் நயன்தாரா நடித்த 'அனாமிகா' சாய்பல்லவி நடித்த 'ஃபிடா' ஆகிய படங்களை இயக்கிய சேகர் கம்முலா சிக்கினார். பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர். நடிகைகளிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதில் வல்லவர்" என அவரைப் பற்றி மறைமுகமாகக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று திடீரென ஃபிலிம் நகர் பகுதிக்குச் சென்று அவர் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தார். மேலாடைகளைக் களைந்த நிலையில் அவர் இருந்தபோது காவல் துறையினர் வந்து அவரது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
"தெலுங்கு நடிகையான எனக்கு பலரும் வாய்ப்பே கொடுப்பதில்லை. எனக்கு தெலுங்கு நடிகர் சங்கத்திலும் உறுப்பினர் அட்டை வழங்க மறுக்கிறார்கள். உறுப்பினர் அட்டை வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் " எனவும் நடிகர் சங்கத்தைக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஶ்ரீ ரெட்டி. இச்சம்பவம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Actress Sri reddy undressed her clothes at Film chamber of commerce, Hyderabad.

Category

🗞
News

Recommended