• 8 years ago
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள், நான்தான், என்று பெங்களூரை சேர்ந்த பெண், அம்ருதா உச்சநீதிமன்றம் போனாலும் போனார், இந்த விவகாரம் பல்வேறு திருப்பங்களோடு இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
டி.என்.ஏ டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிய அம்ருதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஹைகோர்ட்டில் வேண்டுமானால் முறையீடு செய்யுங்கள் என கூறியுள்ளது.
அம்ருதாவின் கோரிக்கைகளை முதலில் கேலியுடன் கடந்து சென்றனர் மக்கள். சொத்துக்காக ஆசைப்பட்டு இவ்வாறு வழக்குகள் போடப்படுவதாக கூறியோரே அதிகம்.

ஆனால் இதற்கு நடுவே, ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா கூறிவரும் கருத்துக்கள்தான் பெரும் புயலை கிளப்பியுள்ளன. இதுவரை இல்லாமல் முதல் முறையாக, ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று லலிதா டிவி சேனல்களுக்கு பகிரங்க பேட்டியளித்து வருகிறார்.
1980ல் சென்னையில் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், பேறு காலம் பார்த்தது தனது பெரியம்மா என்றும், குழந்தையின் தந்தை மறைந்த நடிகர் சோபன் பாபு எனவும், லலிதா கூறிய கருத்துக்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

There are many questions are left un answered in Lalitha's claim who says Jayalalitha has daughter.

Category

🗞
News

Recommended