பாலியல் புகார் கூறும் நடிகைகள் பப்ளிசிட்டிக்காக கூறுகின்றனர் ! நடிகை லதா

  • 6 years ago
நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படுத்துவதே தவறு என்று நடிகை லதா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகைதந்த நடிகை லதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற அந்த காலங்களில் நடிப்பு திறமை என்பது கடினமாக இருந்தது. ஆனால் தற்போது புதிய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் நடிப்பு சுலபமாக இருக்கிறது. அதனால் புதுமுக நடிகர்கள் நடிப்பு துறைக்கு துணிந்து வருகின்றனர்.நடிப்பு மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு வேண்டும். அந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற அந்த காலங்களில் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 20 தடவை படத்தை பார்த்தேன் என்று கூறுவார்கள் அதனால் படம் 250 நாட்கள் ஓடியது. ஆனால் இன்று 25 நாட்கள் ஓடினாலே வெற்றி படம் என கூறுகின்றனர். நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படுத்துவதே தவறு என்றும் அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்கு அடுத்தடுத்து செல்கின்றனர் எனவும் எல்லாத் துறைகளிலும் நல்லது கெட்டது இருக்கும் என கூறிய அவர் புகார் கூறியவர்கள் பப்ளிசிட்டிக்காக கூறியிருக்கலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் நடிகர் சங்க பொறுப்பாளர்கள் நன்றாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவதால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் எனவும் ரஜினி, கமலை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது எம்.ஜி.ஆர் மக்களுக்காக வாழ்ந்தவர் என்றும் எம்.ஜி.ஆர் வழியில் வருவதாக இருந்தால் அவர்களை வரவேற்கிறேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., வழியில் மக்களுக்காக சேவை செய்ய வரும் தேர்தல்களில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றார்.

Actress Lata said that the actress is wrong in revealing harassment

Recommended