• 8 years ago
லட்சுமி என்ற குறும்படம் சமீபத்தில் சமூகவலைதளங்களில் விவாத பொருளாகி வருகிறது. கணவன், குழந்தையை கவனித்து அனுப்பிவிட்டு வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கப் பெண்ணான லட்சுமிக்கு ஒரு ஆணின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த அறிமுகம் எப்படி பரிணாமிக்கிறது என்பதுதான் கதை. சேகரின் மனைவி லட்சுமிக்கு வாழ்க்கை கறுப்பு வெள்ளையாய் நகருகிறது. அன்றாட பணிகள், அலுவலக சுமைகள், கணவனின் உடல் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் லட்சுமியின் வாழ்க்கை கதிர் என்கிற ஆணின் மூலம் வண்ணமயமானதாக மாறுகிறது. கடைசியில் கதிரின் தேவையும் உடல் தேவைதான் என்பதை உணர்ந்து லட்சுமி விலக, வாழ்க்கை மீண்டும் கறுப்பு வெள்ளையாக மாறுவதாக படம் முடிகிறது.ஒரு பெண்ணின் பாலியல் சுதந்திரம் குறித்துப் பேசும் படமென்பதால் பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிகின்றன. இது சர்வதேச அளவில் விருதுகளை குவித்துள்ளது. உலக நாடுகளில் நடந்த பட விழாக்களில் இதுவரை10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.தமிழில் முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி பிரியா. இவரது நடிப்பு இயல்பானதாக இருக்கிறது. லட்சுமி குறும்படம் சர்வதேச படவிழாக்களில் விருதுகளை குவித்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சினி பெஸ்ட் விழாவில், லக்ஷ்மி குறும்படம் அரை இறுதி சுற்றில் வெற்றி பெற்றது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகி வருகிறது.

Shortfilm Lakshmi has created a wave of debates in the social media and here is compilation on the film.

Category

🗞
News

Recommended