• 8 years ago
நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளேன். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று லட்சுமி குறும்படத்தில் நடித்த லட்சுமி ப்ரியா தெரிவித்துள்ளார். லட்சுமி குறும்படத்தை நீங்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த குறும்படத்தில் லட்சுமியாக நடித்த லட்சுமி ப்ரியா பற்றி வதந்திகள் பரவியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என்னைப் பற்றி வதந்தி பரவியுள்ளது. நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளேன். உங்களின் அக்கறைக்கு நன்றி என்று ட்வீட்டியுள்ளார் லட்சுமி ப்ரியா. நான் இதுபோன்ற வதந்திகளை நம்ப மாட்டேன். லட்சுமியால் உங்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வரும் என்று தெரியும். கவலைப்பட வேண்டாம் என ஒருவர் ஆறுதல் கூறியுள்ளார். லட்சுமி ப்ரியாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் வதந்தியா அப்படி ஒன்னும் தெரியவில்லை. ஒரு வேளை இதுவும் பப்ளிசிட்டி ஸ்டண்டா என்று கேட்டுள்ளனர். நிவின் பாலி நடித்துள்ள ரிச்சி படத்தின் விளம்பரத்தை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.

Lakshmi shortfilm fame Lakshmi Priya tweeted that, 'There are rumors and commotions going around about me amidst people and media. Request you to stay away from such news. Am safe and fine ! Thanks a lot for the concern'

Category

🗞
News

Recommended