• 8 years ago
லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என பல துறைகளில் கலக்கி வருபவர். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் இவர் தொகுப்பாளராக இருக்க, பல குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகளை விவாதமாக எடுத்து பேசுவார். பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் கலந்துகொண்டு பிரச்னையை தீர்க்க முயல்வார்கள். இந்த நிகழ்ச்சியின் மாதிரியை நேற்று வெளியாகியிருக்கும் 'அருவி' படத்தில் காட்டியிருக்கிறார்கள். 'சொல்வதெல்லாம் சத்தியம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்த நிகழ்ச்சி பற்றிய உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார்கள்.
நிர்மலா பெரியசாமி, சுதா சந்திரன் ஆகியோரைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி 1500 எபிசோட் கடந்து சென்று கொண்டிருக்க, நேற்று வெளியான 'அருவி' படம் இந்நிகழ்ச்சியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சி அனைத்தும் ட்ராமா தான், இதில் வரும் மக்களை டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக வேண்டுமென்றே அழ வைக்கின்றனர். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுவது எல்லாம் இயக்குனர் சொல்லிக் கொடுப்பது தான் என்பது போல் 'அருவி' படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
அருவி படத்தில் இந்த நிகழ்ச்சியின் பெயர் 'சொல்வதெல்லாம் சத்தியம்' என்று மட்டும் மாற்றி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறும் காட்சிகளுக்கு திரையரங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Lakshmi Ramakrishnan is an actress and director. She is conducting a program called 'Solvadhellam unmai' in a popular television. The show has been shown in the film 'Aruvi'. 'aruvi' film reveals the true face of that reality show that names 'Solvadhellam sathiyam'.

Recommended