• 6 years ago
நடிகர் தனுஷ் இளவயதிலேயே சினிமாவின் பல துறைகளிலும் புகுந்து பல சாதனைகள் செய்துவிட்டார். நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
அண்மையில் 'ப.பாண்டி' படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அதோடு அவர் ஹாலிவுட் படமான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் பாடிய பாடல்கள் செம் ஹிட்டாகியுள்ளன. தற்போது இளையராஜவின் இசையில் மராத்தி மொழியில் ஒரு பாடலை பாடவுள்ளாராம் தனுஷ்.
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். நடிகரையும் தாண்டி, தயாரிப்பாளர், இயக்குநர் என பிரபலமான தனுஷ், பாடகரும் கூட.
அனிருத் கூட்டணியில் இவர் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகளவில் பிரபலமானது. தமிழில் 'காதல் என் காதல்', 'ஜோடி நிலவே' உள்ளிட்ட ஹிட்டான சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.
தற்போது, பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' படத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் இளையராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். சமீபத்தில் இதற்கான பாடல் பதிவு நடந்ததை தனுஷ் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் தனுஷுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இளையராஜா. மராத்தியில், அமோல் படவ் இயக்கும் 'பிலிக்கர்' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் தனுஷை ஒரு பாடல் பாட வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளையராஜா.
சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் எப்போது இளையராஜா இசையில் பாடுவீர்கள் என்று கேட்டார், அதற்கான பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறிய தனுஷூக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

Actor Dhanush has made many achievements in cinema. He shown his talents in many deimensions like Actor, singer, director and producer. Now, Dhanush is to sing a song in the Marathi language for Ilayaraja.

Category

🗞
News

Recommended