• 7 years ago
'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, இன்று இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராகப் பார்க்கப்படுபவர் தனுஷ்.

இன்றைய நிலையில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று சகல ரூட்டிலும் அதிரடி பண்ணுகிறார். தமிழ் சினிமாவில் எந்த முன்னணி நடிகரும் செய்யத் துணியாத அளவுக்கு, வடசென்னை, காலா என பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் ஒரே நடிகர். 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக வெற்றி பெற்றிருக்கும் தனுஷின் நீண்ட நாள் கனவு- ஒரு பீரியட் படம் நடிக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு நிறைவேறுகிறது விரைவில்.
ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்க தனுஷ், நடித்து இயக்க ஒப்புக்கொண்டிருந்தார். அந்த நிறுவனம் தற்போது தயாரிப்பிலிருந்து பின் வாங்கிவிட்டது. தன் கனவுப் படத்தை தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் மூலமே தயாரித்து இயக்கவிருக்கிறார். படத்திற்கு பெயர்- 'நான் ருத்ரன்'.

நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கிற கதை. அதற்காக பெரிய டீமைக் களத்தில் இறக்கி தகவல் திரட்டியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க பா ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' படம் திரைக்கு வரும்போது இது குறித்து அறிவிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் தனுஷ்.

Sources say that actor Dhanush is going to play lead role in a period film in his own banner.

Category

🗞
News

Recommended