• 7 years ago
தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் தற்போதைய டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சூர்யாவோடு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்தவர், தற்போது விஜய்யுடன் 'விஜய் 62', விக்ரமுடன் 'சாமி 2', விஷாலுடன் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நல்ல டெடிகேஷன் உள்ள நடிகை என்றாலும், சமீபமாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அது என்ன தெரியுமா? கீர்த்தி சுரேஷ் தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். அவருக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றபடி இருக்கிறார். சூர்யா ஜோடியாக கடைசியாக அவர் நடித்து 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளிவந்தது. கீர்த்தி சுரேஷ் மேக்கப் முடிந்து வருவதற்காக படக்குழுவினர் அனைவரும் காத்திருக்கிறார்களாம். நல்ல நடிகை எனப் பெயரெடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இதெல்லாம் தேவைதானா? கொஞ்சம் மேக்கப்பை குறைக்கலாமே கீர்த்தி?

Keerthi Suresh is one of the top actresses in the Tamil film industry. Keerthi Suresh taking more time to makeup. So, Film crew disappointing with keerthi.

Category

🗞
News

Recommended