• 8 years ago
தமிழ் சினிமாவில் வழக்கம்போல இந்த ஆண்டிலும் கிட்டத்தட்ட 190 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. அவற்றில் பல படங்கள் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் தாக்குப்பிடிக்காத படங்கள். இந்த வருடத்தை சினிமாவின் சோதனைக் காலம் என்றே கூறலாம். இணையதள பைரசி விவகாரம் ஜி.எஸ்.டி சிக்கல், கேளிக்கை வரி விதிப்பால் சினிமா டிக்கெட் விலை அதிகரிப்பு என பல பிரச்னைகள் நிகழ்ந்தன. இத்தனை சிக்கல்களைக் கடந்தும் நல்ல படங்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டன. அவற்றில் நாம் தேர்ந்தெடுத்த டாப் 10 படங்களை கீழே பார்க்கலாம்... பட்டியலில் விடுபட்டதாக நீங்கள் கருதும் படங்களை கமென்டில் பதிவு செய்யலாம்.

இந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்து தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை உயர்த்திருக்கிறது 'அருவி'. புதுமுக இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன், அறிமுக நடிகை அதிதி பாலன் மற்றும் சிலபேரை வைத்துக்கொண்டு எடுத்த படம் பரவலான பாராட்டைப் பெற்றிருக்கிறது. சிற்சில குறைகள் இருந்தாலும் ரசிகர்கள் அருவியைக் கொண்டாடினார்கள்... குதூகலித்தார்கள். நிஜமான காட்சி அனுபவத்தைக் கொடுத்த 'அருவி' இந்த வருடத்தின் சிறந்த படம்.

முன்னணி நாயகியான நயன்தாரா, தனது மார்க்கெட் ரோலுக்கு ஏற்றபடியில்லாமல், துணிந்து இறங்கி அசத்திய படம் 'அறம்'. சமூகத்தின் அவலநிலையையும், அரசின் இயலாமையையும் பொட்டில் அடித்தாற்போல பேசிய 'அறம்' தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம் என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்தில்லை.
த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த 'குரங்கு பொம்மை' பேசியது மனிதம். தந்தை, மகனுக்கு இடையேயான உறவினை அத்தனை உணர்வுப் பூர்வமாகக் காட்டியிருந்தது இந்தப் படம். குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான காட்சியமைப்புகள், திரைக்கதைகளின் வழியாகவே சிறப்பான ஒரு படத்தை எடுக்க முடியும் என எதிர்காலத்திற்கு நம்பிக்கை விதைக்கக்கூடிய சினிமாவாக அமைந்தது 'குரங்கு பொம்மை'.

As of now, in this year, almost 190 Tamil films have been released. Many of those films have not survived in theaters for a week. The good films were welcomed and praised by fans . Here are the top 10 Tamil films of 2017 we have listed.

Recommended