• 7 years ago
தலைப்பை பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா இடையே பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. தற்போது அவர் விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, பல முறை நிராகரிக்கப்பட்ட பிறகு எனக்கு வணக்கம் சென்னை மூலம் பிரேக் கிடைத்தது. என் ஸ்க்ரிப்ட்டை ஏற்றுக் கொண்டாலும், பெண், தயாரிப்பாளரின் மனைவி, அரசியல் பின்னணி இருப்பதால் இயக்குனர் ஆவது தாமதமானது. தயாரிப்பாளரின் மனைவி மற்றும் அரசியல் பின்னணி இருப்பதால் பிற தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவது எளிது. எங்களின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தை விட்டு மற்றவர்களை நான் ஏன் தயாரிக்குமாறு கூறுகிறேன் என்று பிறருக்கு சந்தேகம் எழுந்தது. மனைவியின் இயக்கத்தில் நடிப்பீர்களா என்று முன்பு ஒரு பேட்டியில் உதயநிதியிடம் கேட்கப்பட்டது. கிருத்திகாவோ தான் கூறிய முதல் கதையில் தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். அதை கேட்ட உதயநிதியோ முடியாது முடியாது என்று கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Kiruthiga Udhayanidhi's second outing Kaali is ready for release. Kirutiga said that she may or may not direct a movie with hubby Udhayanidhi Stalin.

Category

🗞
News

Recommended