• 8 years ago
ஆர்.கே. சுரேஷ் தான் நடிக்கும் முதல் மலையாள படத்தில் 70 மற்றும் 25 வயது நபராக நடிக்கிறாராம்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நன்றாக நடிப்பார் என்று பெயர் எடுத்துள்ளார் ஆர்.கே. சுரேஷ். இந்நிலையில் அவர் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார்.
ஷிக்கரி சாம்பு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் சுரேஷ் 70 மற்றும் 25 வயது நபராக நடிக்கிறாராம். சுரேஷின் வயதான மற்றும் இளம் கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. புகைப்படங்களை பார்ப்பவர்கள் ஆர்.கே. சுரேஷா இது என்று வியக்கும் அளவுக்கு உள்ளார். கேரளாவில் காட்டுப் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் சுரேஷ் கலந்து கொண்டார். குணச்சித்திர வேடத்தில் அவர் நடித்துள்ளாராம். சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாம். குஞ்சாக்கோ போபன், அதே கண்கள் படம் புகழ் ஷிவதா ஷிக்கரி சாம்பு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படத்தை சுகீத் இயக்கி வருகிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ஷிக்கரி சாம்பு படத்திற்காக சுரேஷ் காட்டியுள்ள அர்ப்பணிப்பு திரையுலகினர் தவிர்த்து ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

Producer cum actor RK Suresh is making his debut in Mollywood through Shikkari Shambu. He is playing the role of a 70 year old and 25 year old man for the movie. His transformation has stunned the celebs and fans.

Recommended