• 7 years ago
90-களில் முன்னணி ஹீரோக்கள் பலருடன் சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தவர் தேவயானி. பல நாயகிகள் கவர்ச்சியில் இறங்கி நடித்தபோது, ஹோம்லியாக வந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களின் வரிசையில் இருக்கும் போதே இயக்குநர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவரது அப்பா ஜெய்தேவ் மும்பையைச் சேர்ந்தவர். அம்மா மலையாளி. தேவயானியின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிக்க வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவரது திருமணம் நடந்ததால் சிறிது நாள்கள் தேவயானியுடன் பேசாமல் இருந்தனர். அதன்பிறகு தேவயானிக்கு குழந்தை பிறந்தபிறகுதான் இவர்களுடன் சமாதானம் ஏற்பட்டது.

இந்நிலையில், தேவயானியின் தந்தை ஜெய்தேவ் (வயது 73) இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று மதியம் 1.30 மணிக்கு சென்னை நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Actress Devayani grew up as a leading actress in the 90s. In the meanwhile, Devayani's father Jaidev (age 73) died this morning. Many of the filmmakers are mourning for his demise.

Category

🗞
News

Recommended