• 6 years ago
விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது ஆண்டாளின் கருணை என எச் ராஜா தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரத ரத்னாவுக்கு அடுத்தபடியாக நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் கருதப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து மட்டும் நான்கு பேர் இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

அதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருதும், மதுரையை சேர்ந்த ராஜகோபால் வாசுதேவனுக்கும், நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கும் பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் தமிழில் ஏராளமான நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளார். இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்க ஆண்டாளின் கருணையே காரணம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.


BJP national secretary H Raja H Raja has said that singer Vijayalakshmi Navaneethakrishnan has receiving Padma Shri award by Andal grace. He also praising Goddess Andal for this.

Category

🗞
News

Recommended