கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது 'அருவி' திரைப்படம். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இன்று மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 'அருவி' படத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர். பாராட்டுகள் ஒருபுறமிருக்க, 'அருவி' படத்தில் விஜய் படம் குறித்த காமெடிக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'விஜய் படத்துல நல்ல படமா அது என்ன' எனக் கேட்பது, 'குருவி' படத்தில் ஆக்ஸிலேட்டர் வொயரை விஜய் கடிப்பதை இமிடேட் செய்வது என சில காட்சிகள் வருகின்றன.
அதேபோல், அருவி படத்தில் இடம்பெறும் 'சொல்வதெல்லாம் சத்தியம்' ரியாலிட்டி ஷோ காட்சிகளும் சர்ச்சையாகியுள்ளன. அந்த ஷோவின் தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்னன் 'அருவி' படத்தில் தவறாகச் சித்தரித்தது குறித்து வருத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 'அருவி' படத்தைத் தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, ''அருவி - இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!'' என ட்வீட் செய்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
Vijay fans have opposed the comedy about Vijay's movie in 'Aruvi'. Likewise, the reality show 'Solvadhellam sathiyam' is also controversial. In this case, one of the producers of Dream Warrior Pictures S.R.Prabhu said, "If you were get hurted by aruvi, we apologized."

Category
🎥
Short film