• 7 years ago
கடந்த வருடம் வெளியான படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படங்களில் 'அருவி' முக்கியமான இடத்தை பிடித்தது. அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி பாலன் ஏற்கெனவே அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் சிறிய ரோலில் நடித்திருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸாகி அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் 'அருவி'. இந்தப் படத்தில், அதிதி பாலன் ஹீரோயினாக நடித்திருந்தார். 500 பெண்கள் ஆடிஷன் செய்யப்பட்டு, அதில் தேர்வானவர் அதிதி. அவருடைய நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் ஆகியோர் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் 'அருவி' ஹீரோயின் அதிதி பாலன் ஏற்கெனவே நடித்துள்ளார் என்ற ஆச்சரியமான விஷயம் தெரியவந்துள்ளது.

தற்போது 'என்னை அறிந்தால்' படத்தில் வரும் அதிதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அஜித் படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நடித்ததால் அதை அதிதி பாலன் பேட்டிகளில் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


Adithi Balan, who is the heroine of the film 'Aruvi', has already acted in a small role in Ajith's 'Yennai arindhal'. Aditi balan has acted in a few scenes with Trisha in the movie 'Yennai arindhal'.

Recommended