சிவகங்கையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்ய 4 முறை கடத்தல்!

  • 6 years ago
திருமண ஆசையில் 40 வயது நபர் 15 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ள சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4வது முறையாக கடத்தி செல்லப்பட்ட சிறுமியின் நிலை என்னவென்று தெரியாமல் அவரது பெற்றோர் கவலையில் உள்ளனர். காவல்துறையினர் தங்களின் மகளை கண்டுபிடித்துத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உப்பு செட்டியார் தெருவில் வசிப்பவர் முருகன் இவரது மகள் நிவேதிதா 10 ம் வகுப்பு படித்து வருகிறாள் . மணப்பாறை பகுதியை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது சென்னை குரோம் பேட்டையில் வசித்து வரும் மணிகண்டன் என்பவர் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி சிறுமி நிவேதாவையும் அவரது தாயையும் காரில் கடத்தி சென்றுள்ளார்.
15 years old girl kidn@pped by 40 years old man to marry her for the fourth time, the poor family of missed girl is in worry of how to rescue her and complains police action isnt satisfactory.

Recommended