ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து நின்ற சசிகலா புஷ்பாவிற்காக அவரது முன்னாள் கணவர் லிங்கேஸ்வர திலகன் ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய வரலாறுகள் நிகழ்ந்துள்ளன. சசிகலா புஷ்பாவிற்கும் அவரது கணவரும் இடையே விவகாரத்து கிடைத்துள்ள நிலையில் ஒரு சின்ன பிளாஷ்பேக். ஆங்கில இலக்கியம் படித்த சசிகலா புஷ்பாவிற்கு ஆசிரியை ஆக வேண்டும் என்பது ஆசை, ஆனால் லிங்கேஸ்வர திலகனுடன் திருமணம் என்று விதி முடிவு செய்தது. கனவோடு கணவருடன் சென்னைக்கு வந்த சசிகலா புஷ்பாவின் வாழ்க்கையில் அரசியல் ஆசை துளிர் விட்டது. 2009 முதல் அதிமுகவில் படிப்படியாக வளர்ச்சியடைந்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அதிமுகவில் கட்சியிலோ ஆட்சியிலோ பதவியில் இருந்தவர்கள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தார்கள். குடித்து விட்டு உளறிய சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பாவை மகளிரணி பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
The marriage between both the petitioners namely Ms Sasikala Pushpa and Lingeswara Thilagan is dissolved by a decree of divorce by mutual consent.
The marriage between both the petitioners namely Ms Sasikala Pushpa and Lingeswara Thilagan is dissolved by a decree of divorce by mutual consent.
Category
🗞
News