• 8 years ago
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வருபவர் மணிமேகலை. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறிமுகமான இவர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகின. தனது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் தனது காதலை ஏற்றுக்கொள்ளாமல், வீட்டில் தன்னை அடித்து உதைத்துத் துன்புறுத்துவதாக தொகுப்பாளினி மணிமேகலை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து, 'நான் காதலிக்கிறேன். எனது வீட்டில் என் காதலுக்கு யாரும் சம்மதிக்கவில்லை. சிறிய மோதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் என் குடும்பத்தினர் மீது மரியாதை வைத்துள்ளேன். புகார் எதுவும் கொடுக்கவில்லை' என அண்மையில் தெரிவித்திருந்தார் மணிமேகலை.

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலைக்கு ஃபேஸ்புக்கில் பல ரசிகர் பக்கங்கள் இருக்கின்றன. பாட்டு கேட்பதற்காக போன் செய்வதை விட இவரிடம் பேசுவதற்காக போன் செய்யும் ரசிகர்களே அதிகம்.

கல்லூரியில் சேர்ந்ததுமே மீடியா வேலைக்கு வந்தவர் மணிமேகலை. முதல் வேலையே தொகுப்பாளினியாகக் கிடைத்ததால் படித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தார். வீட்டிலும் நல்ல சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என முன்பு கூறியிருந்தார் மணிமேகலை.

சன் மியூசிக்கில் அறிமுகமான இவர் 'ஃப்ராங்கா சொல்லட்டா' எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். சன் டிவி, கே டிவி ஆகிய குழுமத் தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார் மணிமேகலை.


VJ Manimegalai, who works as anchor in Sun music. Now, Manimagalai has posted a photo with her boyfriend Hussain. She told, "I'm secretly got married today with hussain".

Category

🗞
News

Recommended