பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வருபவர் மணிமேகலை. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறிமுகமான இவர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகின. தனது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் தனது காதலை ஏற்றுக்கொள்ளாமல், வீட்டில் தன்னை அடித்து உதைத்துத் துன்புறுத்துவதாக தொகுப்பாளினி மணிமேகலை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அதுகுறித்து, 'நான் காதலிக்கிறேன். எனது வீட்டில் என் காதலுக்கு யாரும் சம்மதிக்கவில்லை. சிறிய மோதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் என் குடும்பத்தினர் மீது மரியாதை வைத்துள்ளேன். புகார் எதுவும் கொடுக்கவில்லை' என அண்மையில் தெரிவித்திருந்தார் மணிமேகலை. இந்நிலையில், மணிமேகலை தனது காதலருடன் ரகசிய பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது காதலர் ஹுசைனுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மணிமேகலை.
தனது தந்தையை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை எனவும், அவர் விரைவில் மனம் மாறுவார் எனும் அபார நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மணிமேகலை. காதலுக்கு மதம் இல்லை. ஶ்ரீ ராமஜெயம், அல்லா! என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
VJ Manimegalai, who works as anchor in Sun music. Now, Manimagalai has posted a photo with her boyfriend Hussain. She told, "I'm secretly got married today with hussain".

Category
🗞
News